முதுமையை நீக்கி இளமை பெறச் செய்ய.....
காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டில் ,கோலை ஊன்றி குறுகி நடப்பவனும், கோலை வீசி குலாவி நடப்பானே. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.
காலையில் இஞ்சிச்சாறு15மிலி,மூன்று டீஸ்பூன்சுத்தமான தேன்எடுத்து கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.
0
Leave a Reply